கரூருக்குத் தென்கிழக்கே 24 கி. மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமான் வயதான அந்தணராக வந்து சுந்தரருக்கு பொன் தந்த தலம். இந்தத் தலத்தில் இரண்டு ஆறுகள் கூடுவதாலும், வெஞ்சன் என்ற அசுரன் பூசித்ததாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது. கோயில் முன்பு சற்றுப் பள்ளத்தில் இருந்தது. 1977 ஆம் ஆண்டு ஏற்பட்டப் புயலில் சிக்கி சிதிலமடைந்துவிட்டதால் இக்கோயில் தற்போதுள்ள நிலையில் புதியதாக கட்டப்பட்டது. |